AK-61 படத்திற்காக பாங்காக் பறக்கவுள்ளார் அஜித்

ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து அதில் படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தைத் தயாரித்து வருகிறார். ஜூன் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு…

ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து அதில் படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது.
நடிகர் அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தைத் தயாரித்து வருகிறார்.
ஜூன் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ‘அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அஜித் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றதால், அஜித் இல்லாத படக்காட்சிகள் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் பிரம்மாண்டமான ஒரு வங்கி செட் அமைத்து அதில் படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது. ஏற்கனவே படத்தில் 70 சதவீத காட்சிகள் படமாக்கி முடித்து விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் சில காட்சிகள் விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகிய இடங்களில் படக்குழு படப்பிடிப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் சில முக்கியக் காட்சிகள் பாங்காக்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கெல்லாம் மேலாக விஜயின் வாரிசு படமும் அஜித்தின் 61வது படமும் 2023 ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் உலாவிவருகிறது. இதனால் இவ்விருவரின் ரசிகர்களும் இப்போதே இணையத்தில் விஜயின் வாரிசு படத்திலும் அஜித்தின் 61வது படத்திலும் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.