காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தாயார் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மினோ உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. இத்தாலியில் வசித்துவரும் தாயார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்து கடந்த 23ம்…

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மினோ உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 90. இத்தாலியில் வசித்துவரும் தாயார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்து கடந்த 23ம் தேதி சோனியா காந்தி, இத்தாலிக்குச் சென்றார்.

இந்நிலையில், சோனியாவின் தாயார் கடந்த சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நேற்று (ஆக.30) நடந்தது.

இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளமான டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சோனியாவின் மகன் ராகுலும், மகள் பிரியங்காவும் ஏற்கனவே இத்தாலிக்குச் சென்றனர்.

பிரதமர் மோடி இரங்கல் 

சோனியாவின் தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சோனியாவின் தாயார் திருமதி பாலோ மினோவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.