பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது.
இதற்காக நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர். மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ரத்தன் டாடா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் பேசுகையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. 250 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன். தொடர்ந்து நாங்கள் வளர்ச்சியடையும் போது நாங்கள் வாங்கும் விமானங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபேரி கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் வளர்ச்சியடைவதற்கு உதவுவது ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெருமையாக உள்ளது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜக
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள ஆழமான உறவையும் விமான போக்குவரத்தில் இந்தியாவின் வெற்றியையும் இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என்று கூறினார்.







