சர்வதேச நிதி சேவை மையம்; துணை பொது மேலாளர் சத்தியன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி…

குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் துணைப் பொது மேலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருமான சத்தியன் நியூஸ் 7 தமிழ் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமாருக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். …

குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் துணைப் பொது மேலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருமான சத்தியன் நியூஸ் 7 தமிழ் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமாருக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். 

குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்காக பத்திரிகை தகவல் மையத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நமது தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார் பங்கேற்றுள்ளார். அப்போது, சர்வதேச நிதி சேவை மையம் துணை பொது மேலாளரும் தமிழருமான சத்தியனை சந்தித்து கலந்துரையாடினார்.

சர்வதேச நிதி சேவை மையம் குறித்து அவர் எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், சர்வதேச நிதி சேவை மையம் 866 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி சேவை மையம் அமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

நிதி சம்பந்தமான சேவைகனை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சர்வதேச நிதி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 400 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 22 வங்கிகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 22 வங்கிகளில் 7 வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகள்.

அத்துடன் காப்பீடு நிறுவனங்களும் இதில் பதிவு செய்தாக துணை பொது மேலாளர் சத்தியன் தெரிவித்தார்.

இந்த முழு செய்தி கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.