31.5 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை அன்று நடைதிறக்கப்படும். இதுதவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

பின்னர் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் அக்.17-ம் தேதி முதல் செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News 7 tamil – ன் WhatsApp – ல் இணைய: https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading