“விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கும் “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக்…

நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கும் “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார்.  இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

செப்.15-ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007-ம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15-ம் தேதி துவங்கப்பட்டது. இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

மேலும், இப்படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்புராயன் பணியாற்றி இருந்த நிலையில், படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிக்காக கனல் கண்ணன் இணைந்துள்ளார். இதை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News 7 tamil – ன் WhatsApp – ல் இணைய: https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.