வரும் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுகவின் மாநில மாநாட்டுக்காக தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஏற்பாட்டில் தொடர் ஜோதி ஓட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் இடத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது..
ஏறக்குறைய 500 கி.மீ தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்
ஜெயலலிதா சட்டப் பேரவையில் இழிவுபடுத்தப்பட்டதை காங்கிரசின் திருநாவுக்கரசர் மறுக்கிறார். திருநாவுக்கரசர் என்ற ஒருவர் வெளி உலகுக்கு தெரிகிறது
என்றால் அதற்கு காரணம் அதிமுக தான். மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக அவர் உண்மையை மறைத்து பேசுகிறார்
1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற அந்த சம்பவத்தின் போது அதிமுகவினரை கைது செய்தார்கள். ஒரு பெண் என்று பாராமல் ஜெயலலிதாவை எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு திமுகவினர் இழிவுபடுத்தினர்.
17 ஆண்டுகளாக திமுக- காங்கிரஸ் கூட்டணி என்ன செய்தது? அப்போதே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றியிருக்கலாமே? தேர்தல் வரும் போது மட்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கருத்துக்களை சொல்வார். நீட் தேர்வு தற்கொலைகளுக்கான பொறுப்பு திமுகவும், முதலமைச்சரும் தான்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னவர்கள்? ஏன் செய்யவில்லை ? நீட் தேர்வு மசோதா தொடர்பாக எத்தனை முறை குடியரசுத் தலைவரை திமுக எம்.பிக்கள்
சந்தித்தார்கள்? அமைச்சர் உதயநிதி எத்தனை முறை பிரதமர், குடியரசுத் தலைவரை
சந்தித்துள்ளார்? தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக எந்த குரலும் திமுக எழுப்பவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.







