சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவே, டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கக்கூடும் என்றார்.

சசிகலா விடுதலையான பிறகு, மீதமுள்ள மூன்று மாதம் இந்த ஆட்சி நிலைத்திருக்குமா? என்பது சந்தேகமே என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply