போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும்,   அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி அனைத்து…

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும்,   அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதையும் படியுங்கள் : “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறி போகும்” – தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பேச்சு!

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவரணி, மகளிர் அணியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி,  மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்,  தம்பிதுரை எம்பி,  மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்  தலைமை வகித்தார்.

 

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்தித்தில் மாவட்ட செயலாளர் கே,வி ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,  முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்.எல்.ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் என்ற செல்வம் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;  இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.