தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் 2026-ல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சரக பதவியேற்றுள்ளார்.
தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்து இரண்டு அணிகளானது. பின்பு சமரச முயற்சிகளான அணிகள் இணைந்தன.
இந்த சம்பவங்களுக்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ.களான இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. விரைவில் தேர்தலும் நடத்தப்பட உள்ளன.
அதிமுக எம்.ஏல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததை எதிர்த்து வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இசக்கி சுப்பையா, ஜெயக்குமார்,சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை நடத்த கோரியும் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரியும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தவெகவி இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இசக்கி சுப்பையா உள்ளிட்ட நால்வர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.




