IND vs ENG : முகம்மது சிராஜுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு – காரணம் என்ன…?

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜுக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான டி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் தொடரின் நிறைவையடுத்து இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இத்தொடரில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. நியூ சண்டிகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானை, இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்குகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் இங்கிலாந்திற்கு எதிராக 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் அயர்லாந்திற்கு எதிராக 2 டி 20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான டி 20 போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடி வருவதாலும், எதிர்வரும் சர்வதேச தொடர்களுக்குத் தயாராகும் வகையிலும், அவரது பணிச்சுமையைக் குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிராஜுக்கு பதிலாக விளையாட பிரசித் கிருஷ்ணா இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.