பிரதமர் மோடி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் புகுத்தட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “ உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் சுயநலமற்ற செயலுக்கான ஆழ்ந்த ஊக்கம் அடங்கியுள்ளது.

இது மனிதகுலத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப்புனிதமான நன்னாள், அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் புகுத்தட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.