தவெக நோக்கி நகரும் அதிமுக எம்.எல்.ஏக்கள்: ராஜினாமா செய்கிறாரா இசக்கி சுப்பையா?

அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று முன்னாள் அதிமுக சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ ஆவார்.

முன்னதாக நேற்று எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான திலீபன் ஜெய்சங்கர், சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன், நடராஜன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.