முக்கியச் செய்திகள் தமிழகம்

‘சசிகலாவுடன் நான் பேசியதாக வெளியான ஆடியோ போலி’: செல்லூர் ராஜூ விளக்கம்

சசிகலாவுடன், தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவும் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியானது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை மறுத்துள்ளார் செல்லூர் ராஜூ. செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

வாட்ஸ் அப்பில் என்னைப் பற்றி தவறான செய்தி வெளியாகி இருக்கிறது. நான் யாரிடமும் அப்படி பேசவில்லை. என் கருத்து என்பது, கட்சி ஒற்றுமையாக, வலுவாக ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை பல முறை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எங்களை விரும்பாதவர்கள், எங்கள் ஒற்றுமையை விரும்பாதவர்கள், இப்படி செய்து வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜினாமா என்று செய்தி பரப்பினார்கள். இப்போது என்னைப் பற்றி பரப்பி வருகிறார்கள். பரபரப்புக்காக இப்படி செய்து வருகிறார்கள். நான் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவில் என்னைப் போன்று பேச முயற்சி செய்திருக்கிறார்கள். அது என் குரலே அல்ல. அதோடு இரவு ஒன்றரை மணிக்கு நான் ஒருவரிடம் பேசியதாக சொல்வதும் உண்மையல்ல. சின்னம்மா தலைமை தாங்க வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. எந்த முடிவு எடுத்தாலும் அதை தலைமைதான் முடிவு பண்ண வேண்டும். நான் முடிவு பண்ண முடியாது.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

Saravana Kumar

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை! – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Jayapriya

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

Vandhana