ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதே புரியாத அளவில் நடந்து முடிந்தது. அடுத்த பொதுக்குழு கூடும்போது இபிஎஸ்-தான் ஒற்றைத்தலையை ஏற்பார் எனச் சிலர் கூறிவந்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் இபிஎஸ் உருவ பொம்மை கொளுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு’
https://twitter.com/AIADMKOfficial/status/1541085387182833664
அதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் – எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், நடைபெற உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் எந்த விதமான ஒப்புதலையும் அளிக்கவில்லை என் அவர் கூறியுள்ளார்.








