சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தகுதி நீக்கம் செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள்,…

தகுதி நீக்கம் செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள், 9 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 49 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள ப்ளூ ரேடிசன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, செயல் சபாநாயகர் நரஹரி பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் தனி அணியாக இருப்பதால், அவர்களில் யாரையும் தகுதி நீக்க முடியாது என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, மகாராஷ்ட்ர உயர்கல்வி அமைச்சர் உதய் சமந்த், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் இன்று இணைந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.