மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தைத் தந்த சீனு ராமசாமிக்கு நன்றிகள் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மாமனிதன் படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதி – இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படமான மாமனிதனுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா இசையமைத்துள்ளார்.
https://twitter.com/DirectorMysskin/status/1541125855224537088
“மாமனிதன்” குறித்து இயக்குநர் மிஷ்கின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது. அவன் “மாமனிதன்” ஆகிறான்.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தைத் தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/seenuramasamy/status/1541128808094265344








