ஓபிஎஸ்ஸுடன் பயணித்தது வெட்கமாக உள்ளது: கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வத்தோடு பயணம் செய்தது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று  கோவை செல்வராஜ் அளித்த பேட்டியில் கே.பி.முனுசாமி மகனுக்கு திமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பெட்ரோல் பங்க் பெற்றதாகவும்,…

ஓ.பன்னீர்செல்வத்தோடு பயணம் செய்தது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று  கோவை செல்வராஜ் அளித்த பேட்டியில் கே.பி.முனுசாமி மகனுக்கு திமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பெட்ரோல் பங்க் பெற்றதாகவும், அதை அமைச்சர் காந்தி திறந்து வைத்ததாகவும் கூறி, திமுகவுடன் கே.பி.முனுசாமி தொடர்பு வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, “கோவை செல்வராஜ் தெரிவித்தது அவராக கூறவில்லை, அவரைப் பேச வைத்தது ஓ.பன்னீர்செல்வம். என் மகன் சதீஷ் எடுத்துள்ள பெட்ரோல் பங்க் 2020ல் ஆரம்பிக்கப்பட்டு 2040ல் ஒப்பந்தம் முடியும் அளவிற்கு மட்டுமே ஒப்பந்தம் எடுத்துள்ளார். இதை கூட தெரியாமல் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

கோடநாடு நிகழ்வு தொடர்பாக தனது மகனை எய்து ஓ.பன்னீர்செல்வம் பேச வைத்துள்ளார் என்றும், 4 ஆண்டுகள் முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் ஆக பயணம் செய்த போது இந்த யோசனை ஓ பன்னீர் செல்வத்துக்கு வரவில்லையா? எனவும் கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி, “ அவரோடு பயணம் செய்ததை நினைத்து வேதனைப்படுவதாகவும் வெட்கமாகவும் உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓபிஎஸ் - கே.பி.முனுசாமி

மேலும், “ஓபிஎஸ் உடன் இருந்தபோது நடந்த எதனையும் வெளியிட மாட்டேன். அப்படி வெளியிட்டால் அது அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் செயல்பட்டதாக ஆகிவிடும். திமுகவோடு ஓ.பன்னீர்செல்வம் அனுசரணையாக செல்கிறார். கலைஞரின் பராசக்தி படம் போன்ற விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்படி ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது தொண்டர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பினார்.

கட்சித் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “பழனிசாமியின் தலைமையில் ஜனநாயக முறைப்படி கட்சி செயல்படும். எப்போதும் அதிமுகவில் சர்வாதிகாரம் தலை தூக்காது” எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.