அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது!

தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார்.…

தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியினரிடையே ஆதரவு கோரி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் அதுபோல மக்களோடு மக்களாக கரைபுரண்டு ஓடுபவர் வைகைச்செல்வன் என்று கூறினார். தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றும்போது, நாடாளுமன்றத்தில் இருந்து 38 திமுக எம்பிக்களும் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் திமுக எதிரி என்று சாடினார். நீங்கள் போடும் சத்தத்தில் ஸ்டாலினுக்கு ஹார்ட் அட்டாக் வரவேண்டும் என்றும் பத்து ஆண்டுகளாக காய்ந்து போய் கிடக்கும் திமுகவை ஆட்சியில் உட்கார விட்டால் காஞ்சமாடு கம்புல பாய்ந்தது போல பாய்ந்து விடும் என பேசினார். இதனைத் தொடர்ந்து, அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி அளித்து வருவதாக கூறிய ஜான் பாண்டியன், மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.