சிறுபான்மை மக்கள் விவகாரத்தில் அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல், அதனை கடைப்பிடிக்கும் கட்சியாக அதிமுக திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்த பாதையில், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளித்தார்.
அண்மைச் செய்தி: ‘காத்துவாக்குல தமிழ் படங்களை காப்பாத்தும் அனிருத்!’
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த பொதுமக்கள், பூவை ஜெகன் மூர்த்தி, என்.ஆர்.தனபாலன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








