2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய 137 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 449 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, குட்காவை பொறுத்தவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.8 டன்களும், வேலூர் மாவட்டத்தில் 32 டன்களும் அதிகபட்சமாக கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கஞ்சா வேட்டை தொடங்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்,  தமிழ்நாடு முழுவதும் இந்த ஆப்ரேசன் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவது நம்பிக்கை தரும் செய்யலாக உள்ளது என பலரும் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.