எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரமலான் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு கழகத்தை முடக்கியது அதிமுக என்றும் அதனை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது திமுக எனவும் கூறினார். எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்பது திமுக என்றும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘காத்துவாக்குல தமிழ் படங்களை காப்பாத்தும் அனிருத்!’
இதேபோல, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல், அதனை கடைப்பிடிக்கும் கட்சியாக அதிமுக திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்த பாதையில், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








