சென்னை மேடவாக்கம் பகுதி ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமுற்றது.
சென்னையை அடுத்த மேடவாக்கம் – மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் நேற்றிரவு தீ விபத்து நேரிட்டுள்ளது. தொடர்ந்து மளமளவென்று கடை முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 5 வாகனங்களிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.







