அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ‘திடீர்’ ஒத்திவைப்பு!

அதிமுக சார்பில் வரும் 9ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

அதிமுக சார்பில் வரும் 9ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்துள்ளது.

தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகின்ற 9.8.2024 – வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.