சட்டப்பேரவையை புறக்கணிக்கிறதா? அதிமுக – எம்எல்ஏ கூட்டத்தில் முடிவு?

அதிமுக எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையை புறக்கணிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.   தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில்…

அதிமுக எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையை புறக்கணிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தலை வழங்க இன்று மாலை அதிமுக
எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

 

மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று நடைபெறும் அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவையை புறக்கணிக்க அதிமுக முடிவு எடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை ஆகிய இரண்டுமே அதிமுகவுக்கு எதிராக இருக்கும் என்பதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.