திமுகவை எதிர்ப்பதில் கொஞ்சம் கூட பின்வாங்க மாட்டோம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி

திமுக-வை எதிர்ப்பதில் கொஞ்சம் கூட பின்வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.   நாமக்கல் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது,…

திமுக-வை எதிர்ப்பதில் கொஞ்சம் கூட பின்வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

நாமக்கல் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அதிமுகவில் சிறிது தொய்வு ஏற்பட்டு இருகிறது.
திமுகவில் கைகோர்த்து கொண்டு அதிமுகவை ஒழித்து விட்டால் என்றும் நம் மீது வழக்கு வராது என்றும் திமுகவின் B டீமாக ஒரு அணி செயல்பட்டு கொண்டு இருக்கிறது என குற்றம்சாட்டினார். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதே திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தான். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.

 

அந்த எதிர்ப்பில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்க கூடாது என நினைத்து, திமுகவை எதிர்க்கின்ற ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற அவர், 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார் என்றார். திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் இந்தி திணிப்பை பற்றி பேசாமல் தன்னை பற்றி பேசியுள்ளார். நாமக்கல் நகர்மன்ற தலைவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கிறார். அவர் எதிலும் தலையிடக்கூடாது, எம்.எல்.ஏ வும் தலையிடக்கூடாது என கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகாலம் நான் (தங்கமணி) என்ன செய்தேன் என ராஜேஷ்குமார் பேசியுள்ளார். அவர் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொதுமேடையில் 10 ஆண்டுகாலம் என்ன செய்தோம் என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதிக்க தயார் என தங்மணி கூறினார். முன்னாள் அமைச்சர் சரோஜாவும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு கூட்டங்கள் நடத்திய அனைத்து புகைப்படங்கள் ஆதாரம் முழுமையாக தன்னிடம் உள்ளது.

 

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை ராஜேஷ் குமார் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். அதேபோல் எங்களையும் ஏமாற்றுவதற்காக அவர் பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதற்கெல்லாம் தான் பயப்படவில்லை. ராஜேஷ் குமார் ஒன்றரை ஆண்டுகள் செய்த சாதனையும், நாங்கள் 10 ஆண்டுகள் செய்த சாதனையும், இருவரும் ஒரே மேடையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் விவாதிக்க வர வேண்டும் என விமர்சனம் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.