இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை என்றும் அமெரிக்க டாலர் மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை என்றும் அமெரிக்க டாலர் மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு தான் உயர்ந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளது என்றார்.

 

இதனால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன. தான் தொழில்நுட்ப ரீதியாக பேசவில்லை என்றும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவுள்ளது என்றும் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்தியாவின் ரூபாயின் மதிப்பு மேலான நிலையிலேயே உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தை நோக்கியதாகவே உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்பெற செய்வதற்காக அல்ல என நிரிமலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் செயல்படும் மத்திய அமலாக்க இயக்குனரகத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்து அவர் விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.