இபிஎஸ் ஆட்சி அமைய பிரார்த்தனை மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன்

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பிரார்த்தனை மேற்கொண்டுவருகிறார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் 68வது பிறந்தநாள் விழாவை…

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பிரார்த்தனை மேற்கொண்டுவருகிறார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் 68வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற 68 தர்காவில் தொடர் பிரார்த்தனையை அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய பிரசித்தி பெற்ற தர்காவான பேட்டை முகைதீன் மீரா சாகிப் தர்கா, மேலப்பாளையம் கவியரசர் வெள்ளை கலிபா ரிபா தர்கா உள்ளிட்டவற்றில் மலர் கம்பளம் விரித்துச் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.

அண்மைச் செய்தி: ‘‘அண்மைச் செய்தி: ‘‘பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்’ – பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில்’’

இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு துஆவில் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று பிரார்த்தனை மேற்கொள்வதால், மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும் என அவர் வேண்டி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.