பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்த குழந்தைகள்

ரக்ஷாபந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷாபந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களின்…

ரக்ஷாபந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷாபந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களின் கைகளில் ராக்கி கயிறுகட்டி அவர்களை தங்களின் சகோதரர்களாக பாவித்து அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் பண்டிகை, இந்தியாவின் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரக்ஷா பந்தனை டெல்லியில் பிரதமர் மோடி குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், கடை நிலை ஊழியர்கள், தோட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் குழந்தைகள் இன்று பிரதமர் இல்லத்திற்கு வந்து பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

டெல்லியில் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவர்களை தங்களின் சகோதரர்களாக பாவித்து மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.