அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் இல்ல விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தலைவரால் முதிர்ச்சியடைந்தவர், அற்றவர் அப்படி ஒன்றும் இல்லை. ஒரு தேசிய கட்சி அவரை மாநில தலைவராக நியமித்திருக்கிறது. அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். வயதில் சிறியவர், பெரியவர் என்று எல்லாம் பார்க்க கூடாது என்று சீமான் கூறினார்.
முதல்வர் மீது மெட்ரோ ஊழல் குற்றச்சாட்டு அண்ணாமலை வெளியிட்டது பற்றி கேட்டபோது, தெரிஞ்சு போச்சு ஆனா நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வருமான பரிந்துரை அமலாக்கத்துறை எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த மெட்ரோ திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கியது. அவர்களும் ஊழல் செய்திருப்பார்கள். அதையும் எடுத்துக்காட்ட வேண்டும். திமுக ஊழல் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளார். அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். நீங்க அதிமுக இருப்பவர்களை புனிதரா கட்டமைக்கின்ற மாதிரி தெரிகிறது. இந்த அணுகுமுறை சரியில்லை. பாஜக அரசு மோடியின் அரசு. அவரவர் அதிகாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.
சிபிஐ, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை நீதிமன்றம் இது அனைத்தும் தனித்த அதிகாரம் படைத்தது என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இது அனைத்தும் பிரதமர் மோடியின் கைகளில் இருக்கிறது என சீமான் கூறினார்.







