வாழ்வா, சாவா என்ற நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலை சந்தித்து கொண்டிருப்பதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் சாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ வேட்பாளர் சண்முகநாதன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பிரம்மாண்ட வாணவேடிக்கையுடன் பேண்ட் செட்டு அடித்து எம்.எல்.ஏ சண்முகநாதனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
பரப்புரையில் பேசிய அவர், ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கடைசி கட்டத்தில் இருந்து கொண்டு வாழ்வா சாவா என்ற நிலையில் தேர்தலை சந்தித்து கொண்டிருக்கிறார் என பரபரப்பாக பேசினார். மேலும் பேசிய அவர், கருணாநிதியின் இளவரசனாக வளர்ந்து வந்தவர் தான் ஸ்டாலின் என்று அதிரடியாக பேசினார். பின்னர் அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.







