ஆட்டோவில் சென்று நடிகை கௌதமி பிரச்சாரம்!

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகை கௌதமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்தை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு நடிகை…

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகை கௌதமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்தை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு நடிகை கௌதமி ஆட்டோவில் நின்றவாறு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அம்மாவின் ஆட்சி அமைந்திட தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், வாஷிங் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும் கூறி வீதி வீதியாக ஆட்டோவில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கூறினார்.

தங்க சாலையில் தொடங்கி மின்ட் தெரு, இருசப்பன் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளம் முழங்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். வழிநெடுகிலும் வேட்பாளருக்கு அவருக்கு மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அதிமுக சார்பில் ஜே.சி.டி. பிரபாகரன், மறைந்த நடிகர் சிவாஜியின் பேரன் உள்ளிட்ட தோழமை கட்சியினர்கள் பரப்புரையில் ஈடுப்பட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.