அதிமுக எக்ஸ் வலைதளபக்கத்தில் ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று பதிவிடப்பட்டுள்ள ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது , பாரதிய ஜனதா மற்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக எக்ஸ் வலைதளப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து…
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) September 25, 2023
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. நன்றி_மீண்டும் வராதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அதிமுகவினர் ரீடுவிட் செய்து வருகின்றனர். இதனையடுத்து நன்றி_மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.







