சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்வதாகவும், பாமக விலகியது அவர்களது விருப்பம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “நீட் தேர்விற்கு தயாராகாத காரணத்தினால் தான் மாணவர்கள் உயிரை மாய்த்துக் செய்கின்றனர். 3 பேர் இறந்த பிறகு ஆலோசனை மையத்தை ஏற்படுத்தும் திமுக அரசு, அதனை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு வாய்திறக்காத திமுக தோழமை கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன” என்று கூறினார்.
அதிமுகவை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தொடர்கிறது என்றும், பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களின் விருப்பம் எனவும் கூறிய ஜெயக்குமார், “தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடும் திமுக, தேவையில்லாத போது ஆட்டுக்கு தாடி வசனத்தை பேசுவார்கள். ஆளுநரின் நியமனத்தில் திமுகவின் நிலைப்பாட்டை தோழமைக் கட்சி மூலம் வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர்” என்றும் குறிப்பிட்டார்.