அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!

அகமதாபாத் விமான விபத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று(ஜூன்.12) பிற்பகல் 1 மணியளவில்  ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுக்கியது.

விபத்துள்ளான இந்த ஏர் இந்தியா 171 விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசியகள் என மொத்தமாக 242 பேர் பயணித்துள்ளர். இதுவரை வெளியான தகவலின்படி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மேலும் விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இத்துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அங்கு பணியாற்றும் அமைச்சர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதே போல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தால் மனம் உடைந்தேன். பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலியும் பதற்றமும் கற்பனை செய்ய முடியாதது. இந்த நம்பமுடியாத கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன.

நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை – ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.