அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இன்று நாகர்கோவில் வடச்சேரியில் நடந்தது. இந்த மாநாட்டில் மருத்துவ சமுதாய மாணவர்களுக்கு சித்த மருத்துவ கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தொழிலில் பெரும் இழப்பை சந்தித்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ” அக்னி பாத் திட்டம் நாடு முழுவதும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் குறித்து அவதூறு பரப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மருத்துவ சமுதாயத்தினருக்கு சித்த மருத்துவ கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மருத்துவ சமுதாய மக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் ” என்று கூறினார். மாநாட்டில் சமுதாய நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.







