லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஏஜென்ட் டீனா இணைந்துள்ளார். இதையடுத்து இந்த படம் எல்சியூ படமா என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் கதையும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி தற்போது தளபதி 67 என்ற படத்தில் மீண்டும் கைகோர்த்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு ஜனவரி 31ம் தேதி புறப்பட்டு சென்றனர்.
#Thalapathy67 KASHMIR SCHEDULE BEGINS#Thalapathy @actorvijay @trishtrashers @anirudhofficial @PriyaAnand @duttsanjay @Dir_Lokesh @7screenstudio @akarjunofficial pic.twitter.com/7iWp2EZFXF
— Jagadish (@Jagadishbliss) February 3, 2023
இந்த பயணத்தில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் நடிகர் சத்யராஜ் என ஏராளமானோர் இருந்தனர். காஷ்மீர் படப்பிற்காக விமானத்தில் சென்ற வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி 67 படக்குழுவுடன் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாக ஏஜென்ட் டீனாவும் விமானத்தில் ஏறி பயணம் செய்த வீடியோ வெளியான நிலையில், இந்த படம் கண்டிப்பாக எல்சியூ தான் என்றும் ஏஜென்ட் டினாவின் பேக் ஸ்டோரியாக ஒருவேளை இருக்குமா அல்லது இந்த படத்தில் லோகேஷ் நடிகை வசந்திக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.