விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்பு இருவர் கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும் விதர்பா தனி மாநிலத்திற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோரிக்கைகளை கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், அப்பகுதி மக்கள் 11 மாவட்டங்களை இணைத்து விதர்பா மாநிலம் அமைத்தே தீருவோம் என தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மஹாராஸ்டிர மாநிலம், வர்தாவில் எழுத்தறிவு மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஹாராஸ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது, கூட்டத்தில் இருந்த இரு நபர்கள் விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி முதல்வர் முன்பு கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Maharashtra: Two people raised slogans in front of CM Eknath Shinde regarding the demand of Vidarbha state, during the Literary Conference program in Wardha.
Police detained both of them. pic.twitter.com/4yvto3yapi
— ANI (@ANI) February 3, 2023
-ம.பவித்ரா