Age is Just a Number : 77 வயதிலும் நீச்சலில் அசத்தும் மூதாட்டி..!!

நாகப்பட்டினத்தில் 77 வயதிலும் நீச்சலிலும் நீச்சல் பயிற்சிலும் அசத்தி வருகிறார். நீச்சல் பாட்டி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நாகை மாவட்டத்தை 77 வயது…

நாகப்பட்டினத்தில் 77 வயதிலும் நீச்சலிலும் நீச்சல் பயிற்சிலும் அசத்தி வருகிறார். நீச்சல் பாட்டி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நாகை மாவட்டத்தை 77 வயது மூதாட்டி நாகையில் உள்ள புதிய முகமதியார் தெருவை சேர்ந்தவர் ராமாமிர்தம். இவரது கணவர் பக்கிரி சாமி. ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலாளியாக பணி செய்கிறார். இந்த தம்பதிக்கு ஐந்து மகள்கள் உள்ளனர்.

ராமாமிர்ததுக்கு 42 வயதை அடைந்த நிலையில் அவரது கணவர் பக்கிரி சாமி உயிரிழந்தார். இதனையடுத்து தனி ஆளாய் தனது குழந்தைகளை வளர்த்தார். நீச்சலில் சிறந்து விளங்கும் ராமாமிர்தம் பாட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீச்சல் குளம், தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி தருகிறார்.

ராமமிர்தம் பாட்டியின் நீச்சல் பயிற்சியை பலரும் பாராட்டி வரும் நிலையில் “தனது மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நீச்சல்தான் என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார் சீனியர் நீச்சல் பயிற்சியாளாரான பாட்டி.

தனக்கு பத்து வயதாக இருக்கும்போது  தந்தை மாணிக்கத்துடன் கிணற்றுக்குச் செல்லும்பொழுது, நீச்சல் கற்றுக் கொண்டதாகவும், நீச்சல் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், உள்நீச்சல், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பலவகையான நீச்சலை கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏரி மற்றும் குளங்களில் அவ்வபோது நீச்சலடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாட்டி தனது  மகள்கள், பேரக் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்   தங்களது பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்படி கேட்டுள்ளனர். இதனால், பலருக்கும் நீச்சல் பயிற்சியை அளித்து வருகிறார் ராமாமிர்தம் பாட்டி.

77 வயதிலும் பாட்டியின் நீச்சல் கலையை பார்த்து பிரம்மித்து போன நாகை எஸ்பி ஹர்சிங் பாட்டியை பாராட்டுவதற்காக அவருடை வீட்டிற்கு சர்பிரைஸாக சென்று பாட்டியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.