தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் தமிழக மக்களுக்கு எதிரி என சாடினார். மேலும், வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக, பாஜக என்ற பாகுபாடு கிடையாது யாரிடம் கருப்பு பணம் இருந்தாலும் அவர்கள் வீடுகளில் சோதனை நடக்கும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகுதான் அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவது குறித்து முடிவு செய்வோம் எனக் கூறினார்.







