முக்கியச் செய்திகள் தமிழகம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரால் மறுவாழ்வு பெற்ற பெண்: 50 நிமிடத்தில் சென்னை கொண்டுவரப்பட்ட இதயம்!

மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை 50 நிமிடத்தில் சென்னை கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான சுஜாதா என்ற பெண்ணுக்கு இதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை மிக மோசமடைந்ததை தொடருந்து அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யபட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரையில் சாலை விபத்தில் சிக்கி மூளைசாவு அடைந்த 21 வயது இளைஞர் தமிழ்மணி என்பவரின் இதயத்தை தானம் செய்ய உறவினர் ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து 50 நிமிடத்தில் தமிழ்மணியின் இதயம் சென்னை குரோம்பேட்டை கொண்டுவரப்பட்டது.

கடந்த 27ம் தேதி சுஜாதாவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சுஜாதா தனக்கு மறுவாழ்வு அளித்த இளைஞரின் குடும்பத்திற்கும், சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய மொஹமத் ரேலா மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சரியான நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர உதவிய அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Halley karthi

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது!

Niruban Chakkaaravarthi

4 வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு

Ezhilarasan