முக்கியச் செய்திகள் இந்தியா

”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

பல விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்று சத்குருவை சந்தித்து கலந்துரையாடினார் வில் ஸ்மித்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா கடந்த மாதம் 28ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழச்சியை சிறப்பாக கொண்டு செல்வதற்காக பிரபல நகைச்சுவை நடிகரான கிறிஸ் ராக்கை தொகுப்பாளராக வைத்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விழாவின் போது, ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனது
மனைவி ஜாடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்ததால் நடிகர் வில் ஸ்மித் ஆத்திரமடைந்து கன்னத்தில் அறைந்தார். சற்று நேரத்திலேயே தான் நடித்த ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் அதே மேடையில் வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

பெரிதாக கவனம் ஈர்க்காமல் தொடங்கிய அந்த ஆஸ்கர் விழா இந்த சம்பவத்தின் மூலம் உலகம் முழுவதும் வைரல் ஆனது. இந்நிலையில், தன்னை விழா மேடையில் வைத்து அறைந்த வில் ஸ்மித் மீது போலீஸில் புகார் கொடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துவிட்டர் கிற்ஸ் ராக். அவரின் இந்த செயல் மிகவும் பக்குவம் வாய்ந்தது எனவும், என்ன இருந்தாலும் வில் ஸ்மித் அப்படி அறைந்திருக்க கூடாது எனவும் பலரும் கூறினர். இதைத்தொடர்ந்து கிறிஸ் ராக்கிடமும், அகாடமியிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித்.

இதனைத் தொடர்ந்து வில் ஸ்மிதிற்கு ஆஸ்கரில் பங்கேற்பதற்கு 10 ஆண்டுகளாக தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், ஆன்மீகத்தை நோக்கி செல்வதற்காக நேற்று சத்குருவை வில் ஸ்மித் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து, ”நான் சிறிது காலமாக சத்குருவின் வழியை பின்தொடர்கிறேன். பொருளை மட்டுமே நோக்கி ஓடும் இவ்வுலகில், சத்குரு போல் எதன் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களுடன் எனது குடும்பம் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

 சபரிமலை வளர்ச்சி பணி மேற்கொள்வதில் நிதி நெருக்கடி; தேவஸ்வம் போர்டு

Saravana Kumar

இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி: கவிஞர் வைரமுத்து இரங்கல்

Arivazhagan CM

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar