இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பேரணியில் ‘ராம்…

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பேரணியில் ‘ராம் ராம்’ என்றும், ‘இந்தியாவில் இருக்க ஜெய் ஸ்ரீராம் என கூற வேண்டும்’ என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த பேரணியை ஒருங்கிணைத்ததாக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளருமான அஸ்வனி உபாத்யாய் மற்றும் நான்கு நபர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த பேரணியில் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அஸ்வனிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கன்னாட் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக நாடாளுமன்றத்திற்கு ஒரு கி.மீ தொலையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதியை மறுத்திருந்தனர்.

பேரணியில், சாமியார் நரசிங்கானந்த சரஸ்வதி முன்னிலையில் கோஷங்கள் முழங்கப்பட்டன. தொலைக்காட்சி நடிகரும் பாஜக தலைவருமான கஜேந்திர சவுகானும் பங்கேற்றார் இதில் பங்கேற்றுள்ளார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லையென அஸ்வினி கூறியுள்ளார். மேலும், இந்த பேரணி சேவ் இந்தியா எனும் அமைப்பு மூலம் நடத்தப்பட்டதாகவும், தான் ஒரு விருந்தினராக இதில் பங்கேற்றதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.