முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் ஹார்ட் டிஸ்குகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை அடுத்து கோவையில் 35, சென்னையில் 15, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் என மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் வேலுமணி இல்லத்தில் குவிந்த அவரது ஆதரவாளர்கள் ஆவேசமடைந்து காவல் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை பட்டினப்பாக்கத்தில் வேலுமணியின் சகோதரரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டிஎஸ்பி தலைமையில் இரண்டு குழுவினர் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் வேலுமணியின் அறையிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் குவிந்த அதிமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதியினுள் நுழைய வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
2014-18 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி வேலுமணி டெண்டர் ஒதுக்கீடு செய்ததாக புகார் மேலெழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.எல்.ஏ விடுதியில் வேலுமணியிடம் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை மற்றும் கோவையில் வேலுமணியின் வங்கி பரிவர்தணை தொடர்பான ஆவணங்கள், ஹார்ட்டிஸ்குகள் உள்ளிடவை கைப்பற்றப்பட்டுள்ளது. அபிராமபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் ஆடிட்டர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.