இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 147 நாட்களுக்கு பின்னர் 28,204 ஆக குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,511 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,11,80,968 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 139 நாட்களுக்கு பின்னர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,88,508 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 2.36 ஆகவும், தினசரி பரவல் வீதம் 1.87 ஆகவும் உள்ளது. மொத்த பாதிப்பு 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது.” என தெரிவித்துள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1424953820669386752
உயிரிழப்பை பொறுத்த அளவில், 373 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,28,682 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,11,313 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 48,32,78,545 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 52,56,35,710 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.







