ஆதிபுருஷ் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஜூலை மாத விருந்து!

ஆதிபுருஷ் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ரசிகர்களுக்கு ஜூலை மாத விருந்தாக அவரது திரைப்படம் தொடர்பான இரு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியான நிலையில், திரையரங்குகளில்…

ஆதிபுருஷ் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ரசிகர்களுக்கு ஜூலை மாத விருந்தாக அவரது திரைப்படம் தொடர்பான இரு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியான நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படமானது ராமாயணத்தின் ஒரு பகுதியை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கினார். சென்ற வருடம் ஆதிபுருஷ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கேலி செய்யும் வகையில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.

இதனை சரி செய்யும் வகையில் படக்குழு கிராபிக்ஸ் காட்சியில் அதிக கவனம் செலுத்தியதாக கூறப்பட்டாலும்,  ரசிகர்களை எந்த வகையிலும் திருப்திபடுத்தவில்லை என்றே கூற வேண்டும். பட வெளியீட்டிற்கு முன் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என படக்குழு அறிவித்தது. ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமானது, இன்று வரை ரூ.420 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தற்போது பிரபாஸின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து இரு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கே.ஜி.எஃப் திரைப்படத்தினை இயக்கிய பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசர் ஜூலை 7 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. மற்றொன்று பிரம்மாண்ட பொருட்செலவில் அறிவியல்-புனைவு கதையாக உருவாகும் திரைப்படம் ”ப்ராஜெக்ட் கே”.

இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ”ப்ராஜெக்ட் கே” என்பது திரைப்படத்தின் தற்காலிக பெயராகும். படத்தின் அதிகாரபூர்வ பெயரினை ஜூலை 3 ம் தேதி அமெரிக்காவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.