80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!

2ம் உலகப் போரின்போது ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்து கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போர், உலகம்…

2ம் உலகப் போரின்போது ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்து கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போர், உலகம் முழுவதும் பெரிதளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான உயிர்கள் இந்த போரினால் பறிபோயின. இப்போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

1942 ஆம் ஆண்டு மான்டிவீடியோ மாரு என்ற ஜப்பானிய போக்குவரத்து கப்பல் 850 போர்க் கைதிகளையும், 200 பொதுமக்களையும் ஏற்றிச் சென்றது. பப்புவா நியூ கினியாவில் அந்த கப்பல் ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், கப்பலில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் மூழ்கடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸுக்கு அப்பால் தென்சீனக் கடலில், காணாமல்போன கப்பலைப் தேடும் பணியில் ஈடுபட்டது. பல வருட ஆராய்ச்சிக்கு பின்பு இந்த மாத தொடக்கத்தில் தேடுதல் பணியை தொடங்கிய அந்த நிறுவனம், 2 வாரங்களுக்குள் கப்பல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.