முக்கியச் செய்திகள் சினிமா

78 நாட்கள் சிரமங்களை கடந்து செம்பி திரைப்படத்தை எடுத்தோம் -இயக்குநர் பிரபு சாலமன்

78 நாட்கள் கடுமையான குளிர் உட்பட பல சிரமங்களை கடந்து செம்பி திரைப்படத்தை எடுத்ததாக இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

மைனா, கும்கி, கயல் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன்
தற்போது செம்பி என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் கோவை
சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா என்ற சிறுமி, நாஞ்சில் சம்பத்,
பழ.கருப்பையா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும்,
இத்திரைப்படத்திற்கு தெகிடி புகழ் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


தமிழகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாக உள்ள நிலையில் சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் இத்திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதில், திரைப்படத்தின் இயக்குநர் பிரபுசாலமன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நடிகை ஷகிலா, ரித்விகா, நடிகர் பார்த்திபன், கதிர்,
மகேந்திரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஷகிலா, திரைப்படத்தை
பார்த்ததும் பேச முடியாத நிலையில் உள்ளேன். கோவை சரளா மிகப்பிரமாதமாக
நடித்துள்ளார். அஸ்வின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கருத்துள்ள படம்
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பிரபு சாலமன், 78 நாட்கள்
கடுமையான குளிர் உட்பட பல சிரமங்களை கடந்து இத்திரைப்படத்தை எடுத்தோம். இயற்கை எல்லாருக்கும் பிடித்தமான களம். அது சலிக்கவே சலிக்காது. பசுமையான நினைவுகள் என்றுதான் கூறுவோம். அங்கு நிறையக் கதைகள் உள்ளன அதனை கொண்டு வர விரும்புகிறேன். தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டு செல்ல மிகவும்
சிரமப்பட்டோம். அதிகளவில் இயற்கையான ஒளியில்தான் எடுத்தோம் எனத் தெரிவித்தார்.


நடிகர் அஷ்வின் பேசுகையில், இந்த வாய்ப்புக்காக எனது இயக்குநருக்கு நன்றி
கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு கிடைக்கும் முழு பெருமையும்
இயக்குநருக்குதான் சொந்தம். ஹீரோ என்பது மக்கள் பார்த்து அளிப்பதுதான் என
இயக்குநர் கூறுவார். அதற்கு தேவையான அனைத்து உழைப்பையும் இந்த படத்திற்கு நான் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்

Web Editor

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை; ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதி

Arivazhagan Chinnasamy

இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

EZHILARASAN D