4 ஆண்டுகள் உழைப்பில் கடாவர் படம் உருவாகியுள்ளது-நடிகை அமலா பால்

4 ஆண்டுகள் உழைப்பிறகு கடாவர் படம் உருவாகியுள்ளது என்று நடிகை அமலா பால் தெரிவித்தார். நடிகை அமலாபால் நடித்து தயாரித்துள்ள கடாவர் திரைப்படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமலா பால் பேசியதாவது: 2019 இல்…

4 ஆண்டுகள் உழைப்பிறகு கடாவர் படம் உருவாகியுள்ளது என்று நடிகை அமலா பால் தெரிவித்தார்.

நடிகை அமலாபால் நடித்து தயாரித்துள்ள கடாவர் திரைப்படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமலா பால் பேசியதாவது:

2019 இல் தொடங்கப்பட்ட கடாவர் திரைப்படம் நான்கு ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகே உருவாகியுள்ளது. கடாவர் படம் வெளிவர கூடாது என பல தடைகள் இருந்தது. அனைத்தையும் மீறி படம் வெளிவர இருக்கிறது.

திரைத்துறையில் தற்போது யாரை நம்புவது என்றே தெரியவில்லை. கடாவர் படத்தில் அமலா பால் கிளாமர் (கவர்ச்சியாக) இல்லை என சில முக்கிய திரைப்பட விநியோகஸ்தர்களே இது தியேட்டர் படம் இல்லை என தட்டிக் கழித்தனர்.

உமன் சென்ட்ரிக் படங்கள் நடிப்பதில் தான் முழு திருப்தியே இருக்கிறது என்றார் அமலா பால்.

த்ரில்லர் வகை கதை அம்சம் உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.