முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த நியூஸ் 7 தமிழ் கோவை ஒளிப்பதிவாளரின் மகள்!

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் கோவை ஒளிப்பதிவாளராக ரமேஷ் பணிபுரிந்து வருகிறார்.

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார் இவரது மகள் இனியா. அபார நினைவாற்றல் கொண்ட இனியா, அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், நிறங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச் சரியாக கூறி அசத்துகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதுமட்டுமல்லாமல், 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடியும் அசத்தியுள்ளார் இனியா. இவரது அபார நினைவாற்றலை அங்கீகரித்துள்ளது இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ். இவரது சாதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான பாராட்டுச் சான்றிதழும் பதக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமி இனியா கூறுகையில், “எனது பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் எனது பெற்றோரும் அளித்த பயிற்சி காரணமாக என்னால் அனைத்து பாடல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. இதற்கு அடுத்து பல்வேறு சாதனைகளை செய்ய ஆசை” என்கிறார் மழலைக் குரலில்.

மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் இனியா, 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கான 50 பாடல்களைப் பாடி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது கோவை மக்களை மட்டுமல்ல, நியூஸ் 7 தமிழ் குடும்பத்தையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது! மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் இனியா!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வளர் 4.0- தொழில் புரட்சியை ஏற்படுத்தும்- அமைச்சர்

G SaravanaKumar

ஷவர்மாவால் ஏற்படும் பாதிப்புகள்- மருத்துவர் விளக்கம்

G SaravanaKumar

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Halley Karthik